கல்லாவி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவருக்கு தமிழக அரசின் இலவச தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்ட 9 மதத்திற்கு முன்பு ஆணை கிடைத்தது.
இந்நிலையில் வீட்டை கட்ட விடாமல் தடுக்கும் நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக புகார் தெரிவித்தும், 9 மாதங்களாக குடியிருக்க வீடின்றி குழந்தைகளுடன் சமுதாய கூடத்தில் தங்குவதாக வேதனை தெரிவித்தும்
கல்லாவி காவல் நிலையத்தில் நேற்று(அக்.8) செல்வி தனது குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.