கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் அவதானப்பட்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி கடல்போல் காட்சியளிக்கிறது. இதில் சிறுவர் பூங்காவிற்கு சுற்றுலா வரும் பயணிகள் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்தில் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்வது வழக்கம். ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப்.,1) சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமிருந்ததும் படகு சவாரி செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.