கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

63பார்த்தது
கிருஷ்ணகிரியில் காலை முதல் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் காலை சுமார் 11 மணியளவில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. கிருஷ்ணகிரி நகரம், அக்ரஹாரம், பழைய பேட்டை, அரசினர் கலைக்கல்லூரி, காட்டிநாயணப்பள்ளி, சுபேதார் மேடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பெய்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை ஓய்ந்ததும் மீண்டும் வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி