கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி படகு இல்லத்தை ஒட்டியுள்ள சிறுவர் பூங்காவிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்லும் நிலையில் பூங்காவை சுற்றி இரும்பு கிரில்கள் கொண்டு செங்கல் தூண்களால் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர் பழுதடைந்து மொத்தமாக சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் உடனடியாக சுற்றுலாத்துறை நிர்வாகம் மூலம் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.