கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டிய நிலையில் நேற்று(ஆக.29) காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. பர்கூர், எமக்கல்நத்தம், பாறையூர், கோதியழகனூர், நேரலகோட்டை, ஒப்பதவாடி, கணமூர், வரமலகுண்டா பகுதிகளில் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே பெய்த மிதமான மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.