

சாலையோர கடைக்குள் புகுந்த லாரி.. ஒருவர் பலி (Video)
புனே - மும்பை நெடுஞ்சாலையில் உள்ள கேண்டீனை நோக்கி நேற்று (டிச. 07) வேகமாக வந்த லாரி இளைஞர் ஒருவர் மீது பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை லாரி இழந்ததால் இந்த கோர விபத்து நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. விபத்தில் இறந்தவர் இந்திரசேவ் பஸ்வான் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளது.