திருநெல்வேலி மாவட்டம் இட்டமொழி அருகே வடலிவிளையில் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அய்யாதுரை என்பவர் இன்று (மார்ச். 11) அதிகாலை திடீரென உயிரிழந்தார். அவரின் மகளான மதுமிதா தந்தை இறந்த சோகத்திலும் கனத்த இதயத்துடன் அவரின் உடலை வணங்கிவிட்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத பள்ளிக்கூடம் கிளம்பி சென்றார். இது தொடர்பான மனதை உருக வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.