100 முறை கூட மன்னிப்பு கேட்கத் தயார் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தமிழ்நாடு எம்பி-க்கள் நாகரிகமற்றவர்கள் என பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில், மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், "என்னுடைய பேச்சு புண்படுத்தி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். எனது தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர், நான் தமிழகத்தின் மைந்தன். மோடி அரசு தமிழ் மொழிக்கு எதிரானது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.