

ஷேர்மார்க்கெட்டில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே காவிரி ஆற்றின் கரையோரம் இன்று காலை ஒருவர் மரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார். காலை காவிரி ஆற்றிற்கு சென்ற சிலர் கண்டு குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் குளித்தலை எலிமெண்டரி ஸ்கூல் தெருவை சேர்ந்த முருகானந்தம் 47. என்பது தெரியவந்தது. முருகானந்தம் அடிக்கடி வெளியூரில் வேலை பார்த்து வருவதாகவும், இவரின் மகன் பிரவீன். பழைய கார்கள் வாங்கி விற்பனை செய்யும் வேலை செய்து வந்துள்ளார். மகன் தொழில் ரீதியாக பல லட்சம் கடனிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் முருகானந்தம் ஷேர் மார்க்கெட், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை கட்டி இழந்துள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனை செலுத்த முடியாமலும் தனது தொழில் குடும்பத்திற்காக வாங்கிய கடன் சுமையும், ஷேர் மார்க்கெட்டில் இழப்பு ஏற்பட்டதால் சுமார் இரண்டு கோடிக்கு மேல் செலுத்த முடியாமல் மன விரக்தியில் இருந்து வந்தார். இதனால் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் அவரது இறப்பு குறித்து குளித்தலை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.