சமூக நலத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி குளித்தலை வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் வினோதினி தலைமையில் இன்று நடைபெற்றது. குளித்தலை வட்டாரத்திற்கு உட்பட்ட 100 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பொட்டு வைத்து, வளையல்கள் அணிவித்து, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு, சில்வர் தட்டு வழங்கப்பட்டது. பிறகு கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், குளித்தலை நகர்மன்ற உறுப்பினர் சகுந்தலா பல்லவிராஜா, திமுக குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன் ஆகியோர் கர்ப்பிணி பெண்களுக்கு ஆசிர்வதித்து அவர்களுடன் அமர்ந்து கலவை சாதங்கள் அருந்தினர்.