அமெரிக்காவில் தனது ஐஸ்கிரீமை தாய் சாப்பிட்டுவிட்ட கோபத்தில் போலீசுக்கு கால் செய்த 4 வயது சிறுவன் தனது தாயை சிறையில் அடைக்க கோரி புகார் அளித்துள்ளான். போலீசார் வேறு ஏதாவது பிரச்சனையா என்று வீட்டிற்கு வந்து விசாரித்ததில், தாயை சிறையில் அடைக்கவேண்டாம் என்றும் ஐஸ்க்ரீம் மட்டும் வாங்கித்தந்தால் போதும் என்றும் சிறுவன் கூறியுள்ளான். இதையடுத்து சிறுவனுக்கு அதிகாரிகள் ஐஸ்கிரீம் வாங்கி தந்து சர்ப்ரைஸ் செய்துள்ளனர்.