மாநிலங்களவை MP சீட் விவகாரத்தில் அதிமுக மீது பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிப்பது சந்தேகமே என்றும் அக்கட்சியினர் கூறுகின்றனர். இந்நிலையில், பாஜக கூட்டணி அல்லது விஜய்யின் தவெக கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவது குறித்து பிரேமலதா ஆலோசித்து வருவதாகவும், உரிய நேரத்தில் அவர் முடிவை அறிவிக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.