

கிருஷ்ணராயபுரத்தில் ரூ. 6. 09 கோடியில் பணிகளுக்கு பூமி பூஜை
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கருப்பத்தூர் ஊராட்சியில் மேட்டுப்பட்டியில் இருந்து அந்தரப்பட்டி வரை உள்ள சாலையை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1. 06 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கும், தாளியாம்பட்டி முதல் வேங்காம்பட்டி அய்யர்மலை சாலையில் ரூ. 62. 24 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ. 88. 77 லட்சம் மதிப்பில் தாளியாம்பட்டியில் இருந்து சீகம்பட்டி வரை தார் சாலை அமைக்கும் பணிக்கும், கொசூர் ஊராட்சி கொசூரில் இருந்து தந்தூரிபட்டி வரை ரூபாய் 2. 09 கோடி மதிப்பு தார்ச்சாலை அமைக்கும் பணிக்கும், வேலங்காட்டுப்பட்டியில் ரூ. 83. 84 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கும், இரும்பூதிப்பட்டி சந்தையில் இருந்து சடையம்பட்டி வரை ரூ. 58. 64 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு எம்எல்ஏ மாணிக்கம் பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார். மேலும் விட்டுக்கட்டியில் புதிய பயணியர் நிழற்குடை கட்டிடத்தினையும், வைகைநல்லூர் ஊராட்சியில் புதிய பகுதிநேர நியாய விலை கடையினையும், கீழகுட்டப்பட்டியில் சமுதாய கூடம் சமையலறை கட்டிடம் மற்றும் உணவு அருந்தும் கட்டிடத்தினையும் எம்எல்ஏ மாணிக்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், கதிரவன், கரிகாலன், வை. புதூர் பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.