

புகலூர் தைப்பூச திருவிழா; கோலாட்டம் ஆடி அனைவரையும் கவர்ந்த இளம்பெண்கள்
புகலூர் -தைப்பூச திருவிழாவில் கோலாட்டம் ஆடி அனைவரையும் கவர்ந்த இளம் பெண்கள்.கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சிக்கு உட்பட்ட புகழி மலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வந்தது.தைப்பூச நிகழ்வை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற தேரோட்டம் திருவிழாவில் இளம் பெண்கள், முருகன் பக்தி பாடல்களுக்கு ஏற்றவாறு அபிநயம் பிடித்து, கோலாட்டம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.இந்த நிகழ்ச்சியில் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார ஊராட்சி பகுதிகளில் இருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தைப்பூச விழாவை சிறப்பித்தது போல, கோலாட்ட நிகழ்ச்சியையும் சிறப்பித்தனர்.