தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைந்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக எம்பிக்கள்வெளிநடப்பு செய்துள்ளனர். 3ஆம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியவில்லை என நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். கேரளா, மேற்கு வங்க மாநிலங்களையும் நிர்மலா சீதாராமன் குறைகூறிய நிலையில், ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.