நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே குந்தலாடி பாக்கனா அருகே தனியார் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தேயிலை, காப்பி, குறுமிளகு உள்ளிட்ட விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இந்நிலையில் தோட்ட நிர்வாகம் அப்பகுதியில் செல்லும் ஆற்றை மணல் மூட்டைகள் வைத்து மறித்து தண்ணீரை தங்கள் விவசாயத்திற்கு ஸ்பிரிங்கலர் வைத்து பயன்படுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.