தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (மார்ச்.12) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 29 அன்று வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.