க. பரமத்தி-கிணற்றில் இளம் பெண் உடல் மீட்பு. போலீசார் விசாரணை.

66பார்த்தது
க. பரமத்தி- கிணற்றிலிருந்து இளம் பெண் உடல் மீட்பு. போலீசார் விசாரணை.

நீலகிரி மாவட்டம், கூடலூர், அருகே சிம்கானா-வை சேர்ந்த சசிகரன் மகள் கீர்த்திகா வயது 22.

இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டம்,
க. பரமத்தி அருகே கந்தம்பாளையத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் வேலை பார்க்கும் அவரது சகோதரரை பார்க்க கிருத்திகா வந்துள்ளார்.

ஒரு நாள் இருந்த பிறகு மீண்டும் ஊருக்கு புறப்பட்டு செல்வதாக கூறிச் சென்றார்.

ஆனால், அவர் ஊருக்கு செல்லவில்லை. கிருத்திகாவை அவரது அண்ணன் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனிடையே க. பரமத்தி அருகே கருங்காட்டான்காடு பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இளம் பெண் சடலமாக இருப்பது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும் தீயணைப்பு நிலைய வீரர்களும் வந்தனர்.

கிணற்றில் சடலமாக இருந்த கிருத்திகாவை தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி மீட்டனர்.

சம்பவம் தொடர்பாக சகோதரர் அளித்த புகாரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இளம்பெண் உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, இளம் பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா? அல்லது எவரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி