திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த அய்யாதுரை (55). இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். அய்யாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று (மார்ச்.11) காலை உயிரிழந்தார். இந்நிலையில், தந்தையின் மறைவை தாங்கிக்கொண்டு அவரது மகள் மதுமிதா இன்று நடைபெற்ற பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத்தேர்வு எழுதச்சென்றுள்ளார். மாணவியின் இந்த லட்சிய பயணம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.