
கிருஷ்ணராயபுரம்
கடவூரில் வீட்டின் அருகே மது விற்ற இரண்டு பேர் கைது
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா புங்கம்பாடி மற்றும் சுக்காம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக வீட்டின் அருகே மது விற்பனை செய்து வந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் மது விற்ற தங்கராசு 60 மற்றும் மாரியம்மாள் 46 ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அவர்களிடம் இருந்த மொத்தம் 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.