திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என பிரதமர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பி.எம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக தலைமை செயலாளர் எனக்கு கடிதம் எழுதினார். பிஎம்ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழக அரசு ஆர்வமாக இருப்பதாக தமிழக தலைமை செயலாளர் கடிதத்தில் தெரிவித்தார். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் தான் புதிய தேசிய கல்வி கொள்கையை குழு இறுதி செய்தது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.