மனைவியிடம் மது போதையில் தகராறு செய்த கணவன். விரக்தியில் கிணற்றில் மூழ்கி தற்கொலை செய்த மூதாட்டி.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா
ஒத்தமாந்துறை அருகே ரங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி மனைவி ராமாத்தாள் வயது 65.
நல்லசாமி அடிக்கடி மது போதையில் ராமாத்தாளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த ராமாத்தாள் மார்ச் 10ஆம் தேதி மதியம் 3- மணி அளவில் ரங்கபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து ராமாத்தாள் மகன் ரமேஷ் வயது 40 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த மூதாட்டி ராமாத்தாளின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.