பிரபல பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பாக்யஸ்ரீ பிக்கிள் பால் விளையாடும்போது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நெற்றியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 13 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து பாக்யஸ்ரீயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, விரைவில் அவர் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாக்யஸ்ரீ அண்மையில் தலைவி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.