கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் மாவட்ட திமுக சார்பில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கரூர் மாவட்ட செயலாளர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர்,
தமிழ்நாட்டின் அரசியல் கோமாளி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்றும், மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் அவர் லண்டனுக்கு படிப்பிற்காக சென்றபோது ஹிந்தி பேசினாரா அல்லது ஆங்கிலம் பேசினாரா என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என பேசினார்
குளித்தலை நகர செயலாளரும் எம்எல்ஏ வுமான மாணிக்கம் முன்னிலை வகித்து தமிழ்நாடு முதலமைச்சர் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் தலைமை செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா கண்டன உரை ஆற்றினார்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ, திமுக மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, கரூர் மாநகர மேயர் கவிதா சரவணன், குளித்தலை நகர மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.