

கரூர்: மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர் மதிவேந்தன்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட நெய்தலூர், புத்தூர், வடசேரி, பொருந்தலூர், கழுகூர் ஊராட்சிகளில் ஊரகப் பகுதிகளின் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவிகள், தாட்கோ திட்டத்தின் மூலம் கடனுதவிகள், மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறையின் மூலம் 85 பயனாளிகளுக்கு ரூபாய் 1.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, திமுக தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, முன்னாள் யூனியன் சேர்மன் சுகந்தி சசிகுமார், சின்னையன், சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.