கரூர் மாவட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா சமுதாய மன்றத்தில் தண்ணீர் பள்ளி நேச்சர் டிரஸ்ட் மூன்றாம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு தேசிய அறிவியல் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட இளம் வாழ்வியல் விஞ்ஞானிகள் கலந்து கொண்ளும் அறிவியல் கண்காட்சி இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.
இதில் பள்ளி மாணவர்கள் பலரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு பழக்கவழக்கங்கள் நோய் தீர்க்கும் உணவுப் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டும் உடலில் ஏற்படும் நோய்களை எவ்வாறு குணப்படுத்துவது என்பது குறித்து மாணவிகள் செயல்முறை விளக்கத்துடன் பார்வையாளர்களிடம் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்வில் நேச்சர் டிரஸ்ட் நிறுவனர், பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.