பைக் மீது தனியார் பேருந்து மோதி ஒருவர் தலை நசுங்கி பலி

67பார்த்தது
திருச்சி மாவட்டம் இனாம் புலியூரை சேர்ந்தவர் ரத்தினம் மகன் பூபதி 40. இவர் இன்று தனது நண்பர்கள் இருவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து நங்கவரம் - நெய்தலூர் காலனி சாலையில் வந்து கொண்டிருந்தார்.

நங்கவரம் தமிழ்ச்சோலை என்ற இடத்தில் வந்த போது அவர்களின் பின்னால் அந்த தனியார் நகரப் பேருந்து மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த போது பின்னால் உட்கார்ந்து இருந்த பூபதி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயரிழந்தார். மேலும் பைக்கில் பயணம் செய்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

இது குறித்து தகவலறிந்த நங்கவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி