கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று குளித்தலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் ( நேஷனல் லோக் அதாலத் )
நடைபெற்றது.
தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துச்சாமி தலைமை வகித்தார்.
மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தமிழரசி,
நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி பிரகதீஸ்வரன்,
நீதித்துறை நடுவர் எண் 2 நீதிபதி சசிகலா, கூடுதல் மாவட்ட உரிமைகள் நீதிபதி யுகாதி மரியா , குளித்தலை வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல் அமீது, செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான மனுக்கள் வழக்காடிகளிடம் இருந்து பெறப்பட்டு 450 மனுக்கள் மீது சமரச தீர்வு காணப்பட்டது.
இதில் 3 கோடியே 74 லட்சத்து 44, ஆயிரத்து 1977 ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் வழக்கறிஞர்கள் வழக்காடிகள் நீதிமன்ற அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாட்டினை குளித்தலை வட்ட சட்டப் பணிகள் குழு செய்திருந்தது.