கரூர் மாவட்டம் குளித்தலை காவிரிநகரில் உள்ள தனியார் கட்டிடத்தில் தமிழ்நாடு மாநில லங்காடி பொதுகுழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநில செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட செயலாளர் அமர்நாத் முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில் திருச்சி, மதுரை, ராம்நாடு, கரூர், திருப்பூர், சேலம் மற்றும் தென்காசி உள்ளிட்ட 29 மாவட்ட செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பிஜேபியின் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார் கலந்துகொண்டு அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கினார்.
லங்காடி விளையாட்டில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடிக்க வேண்டும், வரும் ஆண்டுகளில் இந்த விளையாட்டுப் போட்டி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும், வரும் செப்டம்பர் மாதம் மாநில அளவில் லங்காடி விளையாட்டுப் போட்டி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் என்ற 3 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் திருச்சி பாஸ்கர், திருப்பூர் பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.