கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியில் கரூர் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு வெற்றிக் கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு தமிழக வெற்றிக்கழக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, இணை செயலாளர் சாய் சதாசிவம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
விழாவிற்கு தோகைமலை ஒன்றிய செயலாளர்
முதலைப்பட்டி சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் பெண்களுக்கான இசை நாற்காலி போட்டி,
கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் குளித்தலை ஒன்றிய செயலாளர் நிரேஷ்குமார், கிருஷ்ணராயபுரம்
ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், குளித்தலை நகர செயலாளர் விஜய்,
கடவூர் ஒன்றிய செயலாளர் அரவிந்த், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் அம்பிகா, தர்ஷினி,
ரம்யா, காமாட்சி, வினிதா மற்றும் தவெக நிர்வாகிகள் முன்னோடிகள் என பலர் கலந்து கொண்டனர்.