குளித்தலை - Kulithalai

கரூர்: ஐஸ் கட்டி அலங்காரத்தில் பேராள குந்தாளம்மன்

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ பேராள குந்தாளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவில் தேர் திருவிழாவை ஒட்டி கடந்த 12ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி பூச்சொரிதல், பால்குடி விழா, இளநீர் பூஜை மற்றும் கிடா வெட்டுதல் பூஜையும் நடந்தது. நேற்று வானவேடிக்கையுடன் சாமி குடி புகுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று அம்மன் முன்பு ஐஸ் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்து வருகிறார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా