திருச்சி உறையூர் பிள்ளைத்தோப்பு தெருவை சேர்ந்தவர் தனபால் மகன் மனோஜ் 24. இவர் இன்று திருச்சியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக கோவை நோக்கி சென்றார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த வெங்கடேஷ் தனது மனைவி, குழந்தைகள், தங்கையுடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுவிட்டு போலிரோ காரில் தனது ஊருக்குச் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர்.
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை குளித்தலையில் கீழ குறப்பாளையம் வந்தபோது தனக்கு எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க சாலையோரமாக பிரேக் போட்டபோது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இதில் காரில் பயணம் செய்த குடும்பத்தினர் சிறு காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குளித்தலை காவல் உதவி ஆய்வாளர் சரவண கிரி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்த பொலிரோ காரை இயந்திர உதவியுடன் மீட்டனர்.
இந்த விபத்துக்கு குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்