இந்தியாவின் முதல் பெண் கப்பல் பைலட் என்ற சாதனையை படைத்தவர் ரேஷ்மா நிலோஃபர். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் 2018ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் எடுத்துக்கொண்ட துறையில் சாதனை படைத்த முதல் பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்வதைவிட, என்னைப்போல் அதிக பெண்கள் இந்த துறைக்கு வந்தால் அதைவிட பெருமையடைவேன்” என்றார். சென்னையில் பிறந்து மேற்கு வங்கத்தில் பணியாற்றி தற்போது உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.