பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவி என்பது மிகவும் முக்கியம். பிள்ளைகள் படிப்பதற்கு அமைதியான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டிய பெற்றோரின் கடமையாகும். அதே போல ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் பாடங்களை கற்றுக் கொடுப்பதோடு தேர்வை எதிர்கொள்ளும் நுணுக்கங்களையும் சொல்லி தர வேண்டியது அவசியம். இருதரப்பும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.