கொட்டாவியானது தூக்கமின்மையின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது, ஆனால், மூளையின் வேகம் குறைந்துவிட்டதை உடல்மொழி மூலம் உணர்த்தும் ஒரு செயலே கொட்டாவி என்கின்றனர் நிபுணர்கள். அதீத சோர்வு, தூக்க உணர்வு இருந்தால் நீண்ட, நெடிய மூச்சுவிட வேண்டும். சுவாச பயிற்சியை மேற்கொண்டால் கொட்டாவியை குறைக்கலாம். சோம்பலான வாழ்க்கைமுறையை மேற்கொள்பவர்களுக்கு கொட்டாவி அதிகமாக வரும் என்பதால் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.