சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நாளை (பிப். 23) நடைபெறும் போட்டியில் கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த தொடரில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. அதே நேரம் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் முகமது ரிஸ்வான் படை தொடரில் இருந்து முன்கூட்டியே வெளியேறுவதை தவிர்க்க நாளை வெல்ல வேண்டியது முக்கியம்.