
கோட்டாறு பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பட்டசாலியன் விளைப் பகுதியில் கோட்டாறு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் தினேஷ் என்பவர் லாட்டரி சீட்டு வைத்திருந்தது தெரியவந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 5 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போன்று பிரஜித் என்பவரும் 5 லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்தனர்.