
அமெரிக்க அதிபரை கொலை செய்வதாக மிரட்டியவர் கைது
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்யவுள்ளதாக, புளோரிடாவில் 34 வயதான ஜஸ்டின் பிளாக்ஸ்டன் என்பவர் மிரட்டியுள்ளார். மேலும், நியூயார்க் நகரத்தில் ஏவுகணைகளை ஏவ்வுள்ளதாகவும் அவர் கூறிய நிலையில் கைது செய்யப்பட்டார். அந்த இளைஞர், அந்நாட்டு அவசர உதவி எண்ணிற்கு பலமுறை அழைத்து, இந்த மிரட்டல்களை விடுத்ததாக போலீசார் கூறுகின்றனர். அவசர எண்ணை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.