ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. நீர் நிலை, மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது. சென்னை பெருநகரப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும். மற்ற இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும். 3 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும்.