சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து

74பார்த்தது
சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் வரும் மார்ச் 9ஆம் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மார்ச் 9ஆம் அன்று காலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை கடற்கரை - எழும்பூர் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி