கோடை காலத்தின் தொடக்கத்திலேயே தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஈரோடு, மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதன்படி கரூர் பரமத்தியில் 102.2 டிகிரி, திருப்பத்தூரில் 101.3 டிகிரி, ஈரோட்டில் 100.76 டிகிரி, மதுரை விமான நிலையம் பகுதியில் 100.4 டிகிரி அளவிற்கு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.