தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் நடைபெறும் விழாவிற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்தார். இந்நிலையில், அவரை காண மக்கள் முண்டியடித்துக் கொண்டு அரங்கிற்குள் செல்ல முயன்றதால் கண்ணாடி கதவுகள் உடைந்தது. இதையடுத்து, மக்களை கண்டுப்படுத்தும் பணி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.