வெந்தயம் அல்லது வெந்தய விதைகள் உணவின் சுவையையும் மணத்தையும் அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இது சர்க்கரை நோய், இதய நோய்கள், கொலஸ்ட்ரால், வயிற்று வலி, சரும ஆரோக்கியம், கூந்தல் ஆரோக்கியம் என பலவிதமான நோய்களுக்கு மருந்தாவதோடு, ஆரோக்கியமான உடலை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் அருமருந்து. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பல வகைகளில் உடலுக்கு நன்மைகளை கொடுக்கின்றன.