மேற்கு சிரியா நாட்டின் புதிய அரசாங்கத்தின் கீழ் சிரிய பாதுகாப்புப் படைகளுக்கும், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் பஷர் அசாத்துக்கு ஆதரவான ஆயுததாரிகளுக்கும் இடையிலான மோதலில் சுமார் 150 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் 35 அரசாங்கப் படைகள், 32 அசாத் ஆதரவாளர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தியது.