அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் மா.ஃபா.பாண்டியராஜன் சந்தித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மா.ஃபா.பாண்டியராஜனை கடுமையாக விமர்சித்து தொலைத்து விடுவேன் என நேரடியாக மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து மா.ஃபா.பாண்டியராஜன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால், அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.