தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சுமார் ரூ.80 கோடி மதிப்பிலான போதைப் பொருளைக் கடத்திச் சென்ற இந்தோனேசியாவைச் சேர்ந்த 2 பேர் உள்பட 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ 'ஹசீஸ்' என்ற போதைப் பொருளை, மத்திய வருவாய் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடுக்கடலில் வைத்து பறிமுதல் செய்தனர். இதில் துறைமுகப் பணியாளர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.