இஸ்லாமியர்களுடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இஃப்தார் நோன்பு துறந்தார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் இஃப்தார் நோன்பு துறக்கும் விழா நடைபெற்று வருகிறது. மாலை 6.24 மணிக்கு இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்த விஜய், மட்டன் பிரியாணி விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். நோன்பு துறக்கும் நிகழ்வில் 2,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர்.