ஐபிஎல்: ரசிகர்களுக்கு இலவச ஜெர்சி வழங்க சன்ரைசர்ஸ் முடிவு

81பார்த்தது
ஐபிஎல்: ரசிகர்களுக்கு இலவச ஜெர்சி வழங்க சன்ரைசர்ஸ் முடிவு
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 18வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் அணியின் ஹோம் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், ஒருவர் 2 டிக்கெட்டுகளை வாங்கும்போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜெர்சி ஒன்று இலவசமாக வழங்கப்படும் என அந்த அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வலைதள முகவரியையும் அந்த அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி