கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பொறுப்பேற்றது. அன்றைய நாள் முதல் தற்போது வரை சுமார் ரூ.41,000 கோடிக்கு லாட்டரி விற்கப்பட்டுள்ளதாக RTI தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஏப்ரல் முதல் 2024 டிசம்பர் 31 காலகட்டங்களில் ரூ.41,138.45 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் ரூ.11,518.68 கோடி அரசுக்கு வரி வருவாய் ஆகவும், ரூ.2,781.54 கோடி லாபமாகவும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.