டெல்லி: இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியின் போது, கணினி கோளாறு காரணமாக அம்பாலாவில் தரையில் விழுந்து நொறுங்கியது. விமானி பாதுகாப்பாக வெளியேறியதாகவும், யாரும் இல்லா பகுதியில் விமானம் விழுந்ததாக இந்திய விமானப் படை தகவல் அளித்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.